தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 20, 2019, 10:27 AM IST

ETV Bharat / city

மாம்பழம் நகரில் உலகச் சுற்றுலா தின கொண்டாட்டம்!

சேலம்: உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி முதல் வரும் 27ஆம் தேதிவரை சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்றுவரும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இன்று சேலம் ஆட்சியர் நடைபயணம் மேற்கொண்டார்.

சுற்றுலாத்துறை சார்பில் நடைபயணம்

சேலம் மாவட்டத்தில் உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை சார்பில் கடந்த 17ஆம் தேதி முதல் வரும் 27ஆம் தேதிவரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி,

  • சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை தூய்மைப்படுத்துதல்,
  • சுற்றுலாத் தலங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்களை சுற்றுலாக் குழுவினருடன் பார்வையிடுதல்,
  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சுற்றுலா தின விழிப்புணர்வு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்துதல்

உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.

சேலத்தில் உலகச் சுற்றுலா தின கொண்டாட்டம்

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தின் பிரசித்திப்பெற்ற மிகவும் பழமையான கோயில்களை இன்று சுற்றுலாக் குழுவினர் பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் ராமன், சுற்றுலாத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு சுகனேஸ்வரர் கோயில் வரலாறு குறித்து சுற்றுலாக் குழுவினருக்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து சுற்றுலாத் தலங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பார்வையிடும் நடைப்பயணம் நடைபெற்றது.

இதையும் படிங்க:

உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு சேலத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!

'சுற்றுலா வளர்ச்சிக்கான ரூ.5.3 கோடி நிதியை முறையாகப் பயன்படுத்துங்கள்'

ABOUT THE AUTHOR

...view details