தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உயர்தர தனியார் மருத்துவமனைக்கு நிகராக சேலம் அரசு மருத்துவமனை...உலக வங்கி மருத்துவ குழுவினர் பாராட்டு - Senior Health Superintendent

சேலம் அரசு மருத்துவமனை, உயர்தர தனியார் மருத்துவமனையை போல் பராமரிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி மருத்துவ குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 28, 2022, 10:27 AM IST

சேலம்:உலக வங்கியின் மருத்துவ குழுவைச் சேர்ந்த, முதுநிலை சுகாதார கண்காணிப்பாளர்கள் தினேஷ் நாயர், ஆருசி பட்நாயக், சிபில் கிரிஸ்டல் ஆகியோர், தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர். பவானி உமாதேவியுடன் நேற்று(செப்.28) சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்தனர்.

குறிப்பாக, மருத்துவமனைக்கு உலக வங்கி சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி பயன்பாடு மற்றும் தமிழ்நாடு மருத்துவ துறையின் கீழ் இயங்கி வரும், தாய் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம் அரசு மருத்துவமனை

சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்யமூர்த்தி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் உலக வங்கி குழுவினருக்கு விளக்கம் அளித்தனர்.

இதனை ஆய்வு செய்த உலக வங்கி மருத்துவ குழுவினர், அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களை பாராட்டியதோடு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதி சிறப்பாக கையாளப்பட்டுள்ளதாகவும், உயர்தர தனியார் மருத்துவமனை போல அரசு மருத்துவமனை பராமரிக்கப்பட்டுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தனர்.


இதையும் படிங்க: பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு ... ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்...

ABOUT THE AUTHOR

...view details