சேலம்: தமிழ்நாடு முழுவதும் பெண் காவல் உதவி ஆய்வாளர்களைத் தேர்வு செய்ய எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பல்வேறு மாவட்டங்களில் இன்று உடல் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில், 413 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 80 பேர் தற்போது காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவலர்கள்.