சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த அஜித் என்பவர் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள நூலகம் ஒன்றில் பணிபுரிந்துவந்தார். அவருக்கும் அதே நூலகத்தில் பணிபுரிந்துவந்த சந்தியா என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, இருவரும் 10 நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சந்தியாவின் பெற்றோர் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவலர்கள் அஜித்தின் தாய் சம்பூரணத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், சம்பூர்ணம் நேற்று (மார்ச் 26) மாலை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.