சேலம்: சேலம் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த கீர்த்திராஜ்(31) - தனஸ்ரீயா(26) தம்பதிக்கு, திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தனஸ்ரீயா பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று கீர்த்திராஜ், மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு தனஸ்ரீயா தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேரில் சென்று பார்த்தபோது, தனஸ்ரீயா தலைப்பகுதி மற்றும் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் இருந்துள்ளன. இதுதொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தனஸ்ரீயாவின் பெற்றோர் கொடுத்தப்புகாரின் பேரில், கணவர் கீர்த்திராஜ் மற்றும் அவரது பெற்றோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டதில், கீர்த்திராஜ் தனது மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், கீர்த்திராஜை கைது செய்தனர்.
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி தற்கொலை