தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’சிஏஏவை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்’ - எடப்பாடி பழனிசாமி - குடியுரிமை சட்டம்

சேலம்: சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

cm
cm

By

Published : Mar 15, 2021, 4:39 PM IST

Updated : Mar 15, 2021, 5:22 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று எடப்பாடி தாலுக்கா அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி தனலிங்கத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1989 ஆம் ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். அதில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து எனக்கு பல்வேறு வாய்ப்புகளை அவர் கொடுத்தார்.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்தையும் இத்தொகுதிக்கு செய்துள்ளேன். கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பாதுகாக்கப்பட்ட காவிரி நீர் வழங்கல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள், ரேஷன் கடைகள், அங்கன்வாடிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள், கிராம சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் என அனைத்தையும் இங்கு நிறைவேற்றிருக்கிறேன்.

’சிஏஏவை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்’ - எடப்பாடி பழனிசாமி

தற்போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அடித்தட்டு மக்கள் முதல் அனைத்துத் தரப்பு மக்களும் எங்களது தேர்தல் அறிக்கையை வரவேற்றிருக்கிறார்கள் ” என்றார். அப்போது, சிஏஏவை திரும்பப்பெற அதிமுகவால் முடியாது என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளது பற்றி முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, குடியுரிமை சட்டத்தை திரும்பப்பேற மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்

Last Updated : Mar 15, 2021, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details