தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விசிக மீது தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம் புகார் - சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

சேலம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றஞ்சாட்டிய தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

vellore ibrahim
vellore ibrahim

By

Published : Jan 13, 2021, 4:45 PM IST

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜனவரி 13) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இந்து - இஸ்லாமியர் இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இந்து - இஸ்லாமியர் ஒற்றுமைக்காக பரப்பரை செய்யும் தனக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

vellore-ibrahim

எதிரிகளை விமர்சிக்கும் போதுகூட கண்ணியத்துடன் நடந்துகொள்ளும் பண்பாடு, நாகரிகம் நிறைந்த தமிழ்நாட்டில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் நாகரிகம் தெரியாமல் பேசிய வருவதாக குற்றஞ்சாட்டிய வேலூர் இப்ராஹிம், இது கருணாநிதியின் நீட்சி என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினின் இளமைகால வரலாறு குறித்து தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர் என்றும், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்காளர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details