காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்எஸ், கபினி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகள் நேற்று முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. மேலும், மூன்று லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்று அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மூன்று நாட்களில் 32 அடி உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93 அடியை எட்டியுள்ளது. கடந்த 58 ஆண்டுகளுக்குப்பின் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு - கர்நாடக எல்லைப் பகுதிகளில் உள்ள காவிரி கரையோர பொதுமக்கள் வெள்ள எச்சரிக்கையால் பீதியில் உள்ளனர்.