சேலம்:பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கல்வராயன் மலையில் கருமந்துறை உள்ளிட்ட ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் 2500க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் பெய்த தொடர் மழைக் காரணமாக மேல்நாடு , கீழ்நாடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட செம்பெருக்கை, சூலாங்குறிச்சி, பெரண்டூர், கோவில்புத்தூர், உள்ளிட்ட 25 குக்கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வினோதமான வண்டுகள் சுற்றிதிரிவது மலைவாழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அந்த வண்டுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், சுகாதாரத்துறையினர், வேளாண்மைத்துறையினர், வருவாய்த்துறையினர், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று வண்டுகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வினோத வண்டுகளால் மலைவாழ் மக்கள் அச்சம் இது குறித்து மலைவாழ் மக்கள் கூறும் போது, "வண்டுகளை கட்டுப்படுத்த பூச்சி மருந்துகள் தெளித்தோம். ஆனால் வண்டுகள் எண்ணிக்கை குறையவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பரவி வரும் வண்டுகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:நீலகிரியில் கனமழை - பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்