தங்கள் மீது பொய் வழக்குகள் போடுவதாகவும், பொது இடங்களில் தங்களை அவதூறாகப் பேசுவதாகவும் கூறி, சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தைத்50-க்கும் மேற்பட்டதிருநங்கைகள் திடீரென்று முற்றுகையிட்டு காவல் துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் பள்ளப்பட்டி காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சமாதானம் அடையாத அவர்கள் தொடர்ந்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.
திருநங்கைகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும், எங்களை அவதூறாகப் பேசுவதற்குப் பதிலாக கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.