தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆட்சியர் அலுவலக வாயிலில் திருநங்கைகள் திடீர் மோதல் - 5 பேருக்கு லேசான காயம்! - திருநங்கை மோதல்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகளிடையே ஏற்பட்ட மோதலால், ஐந்து பேருக்குக் காயம் ஏற்பட்டுப் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் காவல் துறையினர் அனைவரையும் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தி, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

transgender clash infront of salem collector office
transgender clash infront of salem collector office

By

Published : Feb 6, 2021, 10:04 PM IST

சேலம்: புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், பணம் வசூல் செய்வதில் இருதரப்பு திருநங்கைகளுக்கு முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சூழலில் இன்று (பிப்.6), இரண்டு தரப்பினருக்கு இடையேயுள்ள தகராறு தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க இருதரப்பினரும் வந்தனர். அப்போது, இரண்டு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. அதில் திருநங்கைகள் ஒருவரை ஒருவர் ஆபாசமாகப் பேசியவாறு, கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த, அங்கிருந்த காவல் துறையினர் மோதலை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து திருநங்கைகளிடம் நகரக் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், சேலம் ஐந்து சாலை பகுதியில் தங்கியிருக்கும் ராதிகா தலைமையிலான திருநங்கைகள், புதிய பேருந்து நிலையத்தில் பணம் வசூலிக்கும் போது, சுதா தலைமையிலான மற்றொரு திருநங்கைகள் குழுவினர் அதே பகுதியில் வசூலித்து வந்ததைக் கண்டு அவர்களைக் கண்டித்துள்ளார்.

அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்ற நிலையில் இன்று மீண்டும் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டு வர ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளனர் என்று தெரியவந்தது.

ஆட்சியர் அலுவலக வாயிலில் திருநங்கைகள் திடீர் மோதல்

இந்த மோதலில் தனிஷ்கா, சுதா, மிதுனா உள்ளிட்ட 5 திருநங்கைகள் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருநங்கைகளின் இந்த திடீர் மோதலால், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details