சேலம் மாவட்டம் ஓமலூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட 21ஆவது நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் உட்பட 200க்கும் மேற்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சுசீந்திரகுமார், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசுடன் இணைந்து பாடுபடும் என்றும் தெரிவித்தார்.