சேலம்: தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (42). இவரது மனைவி ஆலயமணி (33). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆலயமணி, தனது மகன்களுடன் கோயிலுக்கு சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த கலியமூர்ததி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
திருமணத்தை மீறிய உறவு
இது தொடர்பாக தலைவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது ஆலயமணி மீது சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் தேன்குமார் (31) என்பவருக்கும், ஆலயமணிக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. பின்னர் கணவருக்குத் தெரியவந்ததையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆலயமணி, தேன்குமார், அவரது நண்பர்கள் ஹரிகிருஷ்ணன் (19), 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து கலியமூர்த்தியை கொலை செய்ததது தெரியவந்தது.