தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - இறந்த நிலையில் மீட்பு - newborn

சேலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் குப்பையில் இருந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாராணை நடத்தி வருகின்றனர்.

பச்சிளம் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற அவலம்
பச்சிளம் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற அவலம்

By

Published : Oct 10, 2022, 6:10 PM IST

சேலம்:நெத்திமேடு அருகேவுள்ள குப்தா மெஷின் ரோடு பகுதியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளங்குழந்தை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை எட்டு மேடு பகுதியில் குப்பை அள்ள வந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், உயிரிழந்த நிலையில் இருந்த குழந்தை உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அன்னதானப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அன்னதானப்பட்டி காவல் துறையினர், குழந்தை உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை வீசி சென்ற நபர் யார் என்பது குறித்து காவல் துரையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பிளாட்பார்மில் பட்டா கத்தியை உரசியபடி சென்ற மாணவர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details