சேலம்:விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதற்கான இழப்பீடுகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும், விவசாயிகளின் கூட்டுக் குழுக் கூட்டம் சேலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ. எம். முனுசாமி தலைமையில் நடைபெற்றது.
தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் - விவசாயச் சங்கம் அதிரடி அறிவிப்பு! - தலைமைச் செயலக முற்றுகை போராட்டம்
பிப்ரவரி 11ஆம் தேதி தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விளை நிலங்களில் உயர் மின் அழுத்தக் கோபுரம் அமைப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம், “உரிய அனுமதி பெறாமல் அலுவலர்கள் விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கக் கூடாது. உயர்மின் கோபுர திட்டம் செயல்படும் போது, ஏற்கனவே எரிவாயு எண்ணெய் குழாய் இணைப்புகள் பதிக்கப்பட்டுள்ள இடத்திற்கு அந்த நிலமதிப்பில் 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல் உயர்மின் கோபுர திட்டப் பணிகளிலும் செயல்படுத்த வேண்டும்.
மின் கம்பி மற்றும் மின் கம்பம் செல்லும் வழியில் உள்ள கட்டடங்கள், விளைநிலங்கள், கிணறு, மரங்கள் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகும் அனைத்திற்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி பிப்ரவரி 11ஆம் தேதி தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.