தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசிய கல்வி கொள்கை வரைவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! - மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம்: மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவை திரும்ப பெற வலியுறுத்தியும், அரசு பணியாளர்களின் ஊதிய உயர்வை குறைக்க பரிந்துரைத்த மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 7, 2019, 3:21 PM IST


2019ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய கல்விக் கொள்கை வரைவு இந்தியாவில் குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மக்கள் நலனுக்கு விரோதமான புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், அரசுப் பணியாளர்களின் ஊதிய உயர்வை குறைக்கும் முடிவை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம், மத்திய அரசு மக்கள் விரோத போக்கை கையாண்டு வருவதாகவும், அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு விரோதமான வகையிலேயே நிறைவேற்றி வருகிறது என்றும் கூறினார். புதிய கல்விக் கொள்கை திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை வரைவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: பொன்னேரியில் ஜாக்டோ அமைப்பின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஊதிய உயர்வு, ஜாக்டோ-ஜியோ அமைப்பு போராளிகள் மீது தொடுக்கப்பட்ட பணி நீக்க உத்தரவு, தேசிய கல்வி கொள்கை வரைவு 2019யை திரும்ப பெறுதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டாக்டர் இராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் காத்தவராயன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி, அரசு ஊழியர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், வருவாய் துறை ஊழியர் சங்கம், அனைத்து ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details