இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ் புலிகள் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் உதய பிரகாஷ் கூறுகையில், "மறைமுகமாக குலக்கல்வி முறையை மீண்டும் மத்திய அரசு திணிக்க பார்க்கிறது. இதனால், கல்வி வளர்ச்சி அடையாமல் மீண்டும் கற்கால நிலைக்கே தமிழ்நாடு மாணவர்கள் செல்லும் அவல நிலை ஏற்படும் ஆபத்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! - Tamil Tigers Party
சேலம்: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எனவே, உடனடியாக மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வேண்டும். இதை தமிழ்நாட்டில் நடைமுறைக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சித்தால் மாநில அரசு தொடர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து தமிழ்நாடு அளவில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறும்" என்று தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்தும் மதவாத நடவடிக்கையை கண்டித்தும் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.