தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'வாகன விதிமீறலா?' - ஆட்டோமேட்டிக்காக அபராதம் விதிப்பு - Vehicle violation activity in Salem

சேலம்: முதன்முறையாக ஆட்டோமேட்டிக் (automati ) கேமராவைக் கொண்டு வாகன விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை காவல் ஆணையாளர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார்.

Salem Police Commissioner Senthilkumar
Salem Police Commissioner Senthilkumar

By

Published : Dec 4, 2020, 4:52 PM IST

சேலம் மாநகரப் பகுதிகளில் வாகன விதிமீறலைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று அதிக அளவில் வாகனங்கள் கடந்துசெல்லும் ஐந்து ரோடு சந்திப்பில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கும் திட்டத்தை காவல் ஆணையாளர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார். ஐந்து ரோடு சந்திப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 24 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியைக் கடக்கும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் சென்றாலோ ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் சென்றாலோ நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமல் சென்றாலோ உடனடியாக அவர்கள் கேமராவில் பதிவுசெய்யப்படுவர்.

பின்பு அந்த வீடியோ காவல் கட்டுப்பாட்டு அறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணிற்கு அபராத தொகை விவரம் அனுப்பப்படும்.

இது தொடர்பாக பேசிய காவல் துறை ஆணையர், "இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்வோர் தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். மேலும் ரசீது பெறப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதம் செலுத்தாவிட்டால் வாகனம் தொடர்பான அனைத்து அலுவலகப் பணிகளும் தடைப்படும். அதனைத்தொடர்ந்து வாகனம் சாலையில் இயக்கும்பட்சத்தில் பறிமுதல்செய்யப்படும்" என எச்சரிக்கைவிடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details