சேலம்: ஒருவர் தமக்குத் தானே சிலை வடிவமைத்து நிறுவியுள்ள சம்பவம் சேலம் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள அத்தனூர்பட்டி தூக்கியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி (60). இவர் மனைவி, குழந்தைகளுடன் தனது சொந்த வீட்டில் வசித்து வந்த போது, திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களைப் பிரிந்து தனியாக சென்றுவிட்டார். தற்போது அதே பகுதியில் 25 ஆண்டுகளாக தெருக்களில் உள்ள நெகிழிக் குப்பைகள், கீழே கிடக்கும் மதுபாட்டில்களை சேகரித்து அவற்றை விற்றுகிடைத்த பணத்தைக் கொண்டு, தனக்கு என்று ஒரு ஓட்டு வீட்டைக் கட்டிக் கொண்டு, அதிலேயே வசித்து வருகிறார், நல்லதம்பி.
நல்ல தம்பிக்கு, சிறு வயது முதலே தன்னுடைய மரணத்திற்குப் பின்பு, தான் வாழ்ந்த இந்த பகுதியில் உள்ளவர்கள், தன்னை குறித்து பேசவேண்டும் என்றும்; தன்னை மறந்துவிடக் கூடாது என்பதிலும் விருப்பம் இருந்துள்ளது.