இது தொடர்பாக எஸ்.ஆர்.பார்த்திபன் கூறுகையில், "சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி கிராமம் மரத்துக்குட்டை பகுதியைச் சேர்ந்த சேட்டு-லலிதா தம்பதியின் மகன் சுஜீத்குமார், நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு திமுக நிதி உதவி! - நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்
சேலம்: நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சுஜீத்குமாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கினார்.
S. R. Parthiban
720 மதிப்பெண்களுக்கு 635 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 7,286ஆவது இடத்தை பெற்றுள்ளார். அதனால் அவருக்கு ஊக்கத் தொகையாக திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. மாணவருடைய மருத்துவர் கனவு நனவாக திமுக சார்பில் வாழ்த்துகள் " என்றார்.
இதையும் படிங்க:7.5% இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு அனுமதியளிப்பாரா ஆளுநர்? தள்ளிப்போகும் கலந்தாய்வு!