தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாதேஸ்வரன் மலைக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - மாதேஸ்வரன் மலைக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சேலம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு மாதேஸ்வரன் மலைக்கு சேலத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

special buses to madheswaran temple from Salem
special buses to madheswaran temple from Salem

By

Published : Feb 18, 2020, 7:09 PM IST

சிவ பக்தர்களின் முக்கிய விழாவான மகா சிவராத்திரியை முன்னிட்டு சேலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக மாதேஸ்வரன் மலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து சேலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ. அன்பு அபிரகாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”வருகிற 21ஆம் தேதியன்று நடைபெறவுள்ள மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலத்திலிருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், மேட்டூரிலிருந்து செல்ல கொளத்தூர், பாலாறு வழியாகவும், தருமபுரியிலிருந்து செல்ல மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், கிருஷ்ணகிரியிலிருந்து செல்ல தருமபுரி, மேட்டூர் வழியாகவும், ஓசூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்குச் செல்ல கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாகவும், ஈரோட்டிலிருந்து மாதேஸ்வரன் மலைக்கு பவானி, மேட்டூர் வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று குறிப்பிட்டப்பட்டது. மேலும் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால், பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து வசதியாகச் செல்லலாம் என்றும் குறிப்பிடப்பட்டது.

இதையும் படிங்க: மகா சிவராத்திரியை முன்னிட்டு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details