சேலம் பகுதியில் உள்ள முள்வாடி கேட் அருகே தனியார் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை உணவு விடுதியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உணவு விடுதியிலிருந்து புகை வருவதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ அதிகமானதால் உடனடியாக தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது சமையல் மாஸ்டரான ராஜேந்திரன் என்பவர் உணவு விடுதியில் இருந்து மூன்று சிலிண்டர்களை வெளியே எடுக்க முயன்றபோது எரிந்து கொண்டிருந்த ஒரு சிலிண்டர் திடீரென்று வெடித்தது.