குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்பினர், பொதுமக்கள் போராடி வரும் நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
முதலமைச்சர் வருகை: இஸ்லாமியர்கள் எதிர்ப்பு - SALAM BLACK FLAG NEWS IN CM VISIT
சேலம்: நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் அவர்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். .
சேலம்:நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தை எதிர்த்து, இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் அவர்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சேலம் வரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சேலம் முகமது புறா, கோட்டை, ஃபாத்திமா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் கடைகள் மற்றும் தெருக்களில் கருப்புக் கொடி கட்டி தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதையும் படிக்க:சிஏஏவுக்கு எதிர்ப்பு இஸ்லாமியர்கள் தர்ணா