தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டோக்கன் விவகாரம் - சட்டப்பேரவை உறுப்பினருக்கு எதிராக போராட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலின் போது வழங்கப்பட்ட டோக்கனுக்கு பொருள்கள் அளிக்கப்படவில்லை என கூறி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Jun 2, 2021, 10:03 AM IST

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக சார்பில் கு. சித்ரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியபட்டணம் பேரூராட்சி பகுதியில் அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கியதாக தெரிகிறது.


கு.சித்ராவை வெற்றிபெறச் செய்தால் தலா 2000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வீடு தேடி வரும் என அப்போது அதிமுகவினர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவை உறுப்பினருக்கு எதிராக போராட்டம்
ஆனால் அவர் கூறியது போல மளிகை பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அயோத்தியாபட்டணம் பகுதியில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் கு. சித்ரா ஆதரவாளர்கள் வழங்கிய டோக்கனை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .தற்போது நாங்கள் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோம் . இந்த காலகட்டத்தில் அவர் சார்பில் நிவாரண பொருட்களை கூட வழங்காமல், வெறும் டோக்கனை வைத்து எங்களை ஏமாற்றுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details