தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழ்நாட்டில் 3ஆவது அணி வலிமையாக இருக்காது' - Sitaram Yechury press meet in Salem

சேலம்: "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மூன்றாவது அணி வலிமையாக இருக்காது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாட்டில் 3ஆவது அணி வலிமையாக இருக்காது'
'தமிழ்நாட்டில் 3ஆவது அணி வலிமையாக இருக்காது'

By

Published : Mar 5, 2021, 4:51 PM IST

சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டுப தலைமை உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "பாஜக, அதிமுக தீயசக்திகளை எந்த காலத்திலும் சகித்துக்கொள்ள முடியாது. நாடு மோசமான சூழ்நிலையில் உள்ளது. ஜனநாய உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. எனவே, பாஜக, அதிமுக கூட்டணி அகற்றப்பட வேண்டும்" என்று கடுமையாக சாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "திமுகவுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். திமுக தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளதால் பாஜகவை திமுக எதிர்கொள்ளும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மூன்றாவது அணி வலிமையாக இல்லை. 80 வயதுக்கு மேற்பட்டோர் தேர்தலில் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற முடிவு குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details