சேலம் மாவட்டம் சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு பயோ டீசல் விற்பனை செய்ய டேங்கர் லாரிகளில் பயோ டீசல் கடத்திவருவதாக சங்ககிரி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் சேலம் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லசிவம் தலைமையிலான காவல் துறையினர், சங்ககிரி பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
4 பேர் கைது
அப்போது வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் பயோ டீசல் கடத்திவந்த இரண்டு டேங்கர் லாரி, சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் ஒரு டேங்கர் லாரி, சங்ககிரி கெமிக்கல் பிரிவு பகுதியில் மினி டெம்போ ஆகிய நான்கு வாகனங்களையும் சங்ககிரி காவலர்கள் பறிமுதல்செய்தனர்.
மேலும், லாரி ஓட்டுநர்கள் ஆரோக்கியராஜ், பழனிசாமி, கௌதம், சங்கர் ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்து மாவட்ட குடியுரிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 'ஃபாஸ்ட் புட் கடையில் தீ விபத்து: புரோட்டா மாஸ்டர் உள்பட 5 பேர் காயம்'