ஏடிஎம் மையத்தில் தீ விபத்து - sbi bank atm center fire accident
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக ஏடிஎம் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சேலம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்து பெரும் சேதம் ஏற்படாமல் தடுத்தனர்.
இந்த விபத்து குறித்து சேலம் டவுன் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தீ விபத்து குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு விசாரணைநடத்தினார்.
விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஏடிஎம் மெசினில் வைக்கப்பட்டு இருந்த பல லட்சம் ரூபாய் பணம் சேதாரமின்றி தப்பியது குறிப்பிடத்தக்கது.