தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சில தினங்களுக்கு முன்பு இவ்வுருக்காலையை விற்பதற்காக உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு உருக்காலை தொழிலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, உடனடியாக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
உருக்காலையை தனியார்மயமாக்க தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு..! - salem steel plant protest
சேலம்: உருக்காலையை தனியார் மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் பேரணியாக வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![உருக்காலையை தனியார்மயமாக்க தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3825559-thumbnail-3x2-salem.jpg)
இதனையடுத்து மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, உருக்காலை தொழிலாளர்கள் இன்று தங்களது குடும்பத்தோடு பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம், உருக்காலை மோகன் நகர் நுழைவு வாயில் எதிரே தொடங்கிய பேரணியில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆலையை தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இப்பேரணியில் சட்டப்பேரவை திமுக உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினர் எஸ் ஆர். பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு, தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பேரணியில், உருக்காலைக்கு நிலம் கொடுத்த விவசாயி ஒருவர் ஏர் கலப்பையுடன் மாட்டு வண்டியில் வந்து பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.