தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலத்தில் துணை வட்டாட்சியர் கைது!

சேலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை நில கிரயத்திற்கு சொத்து மதிப்பை குறைத்துகாட்ட 1.50 லட்சம் கையூட்டு பெற்ற துணை வட்டாட்சியர் கைதுசெய்யப்பட்டார்.

By

Published : Dec 10, 2020, 12:03 PM IST

Special tehsildar arrested in bribe case Salem bribe case துணை வட்டாட்சியர் கைது சேலம் கையூட்டு லஞ்சம்
Special tehsildar arrested in bribe case Salem bribe case துணை வட்டாட்சியர் கைது சேலம் கையூட்டு லஞ்சம்

சேலம்: சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் (24) என்பவர் திருச்செங்கோடு வடகுராம்பட்டி கிராமத்தில் வாங்கிய 1.18 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய சேலம் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்த அலுவலகத்தில் பணியாற்றிவந்த முத்திரை கட்டணம் பிரிவு துணை வட்டாட்சியர் ஜீவானந்தம் (41) நில கிரயத்திற்கு சொத்து மதிப்பை குறைத்துக்காட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் கையூட்டு கேட்டுள்ளார்.

துணை வட்டாட்சியர் கைது
இது தொடர்பாக நிஷாந்த் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர் சேலம் காந்திரோடு பகுதிக்கு வந்து கையூட்டு பணத்தைப் பெற்ற ஜீவானந்தத்தை ஏடிஎஸ்பி சந்திரமவுலி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதையடுத்து ஜீவானந்தத்தை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைதுசெய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கைதுசெய்யப்பட்டவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார்.

ABOUT THE AUTHOR

...view details