தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலம் ரவுடி என்கவுண்டர் விவகாரம்: நீதிபதி நேரில் விசாரணை! - justice inquired

சேலம்: ரவுடி கதிர்வேல் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதிபதி சரவணபவன் இன்று நேரில் விசாரணை நடத்தினார்.

சேலம் ரவுடி என்கவுண்டர் விவகாரம்: நீதிபதி நேரில் விசாரணை!

By

Published : May 3, 2019, 1:58 PM IST

சேலம் காரிப்பட்டியைச் சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல் நேற்று காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இதனையடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சேலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபவன் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அரசு மருத்துவமனை அமரர் அறையில் வைக்கப்பட்டுள்ள ரவுடி கதிர்வேலு உடலை பார்வையிட்டதோடு, என்கவுண்டர் குறித்து காவல் துறை அலுவலர்களிடமும் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

சேலம் ரவுடி என்கவுண்டர் விவகாரம்: நீதிபதி நேரில் விசாரணை!


இச்சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் காவலர்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details