சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அடுத்த இடையப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகேசன்(40). இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், ஜெயப்பிரியா, ஜெயப்பிருந்தா ஆகிய இரு மகள்களும், கவிப்பிரியன் என்ற மகனும் உள்ளனர்.
இவர், இடையபட்டி- வாழப்பாடி பிரிவு சாலையில், மளிகைக் நடத்தி வந்தார். இந்த நிலையில், முருகேசன் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் நேற்று ( செவ்வாய்க்கிழமை) காலை வெள்ளிமலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மதுபானம் வாங்க சென்றுள்ளார்.
போலீஸ் தாக்குதலில் வியாபாரி உயிரிழப்பு மது அருந்திவிட்டு நண்பர்களுடன் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது,
கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே பாதுகாப்பு பணி மேற்கொண்டிருந்த போலீஸார், தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
போலீஸ் தாக்குதலில் வியாபாரி உயிரிழப்பு அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த போலீஸார், முருகேசனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகேசன், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன் உறவினர்கள் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். வியாபாரியை கடுமையாக தாக்கி அவரது இறப்புக்கு காரணமான போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், முருகேசன் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுவரை சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள முருகேசனின் சடலததை வாங்கப் போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
போலீஸ் தாக்குதலில் வியாபாரி உயிரிழப்பு
இதனையடுத்து அங்கு சென்ற சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடமும் அவர் விசாரணை நடத்தி வருகிறார். இதனைத்தொடர்ந்து முருகேசன் மீது தாக்குதல் நடததிய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க :'அணில விடுங்க... அதிமுகவிடம் கேள்வி கேளுங்க' - ராமதாஸுக்கு செந்தில் பாலாஜி பதிலடி