ஓமலூர் - மெச்செரி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் தடங்களில் சோதனை ஓட்டம் - Omalur - Mecheri Railway Station
சேலம்: ஓமலூர் - மெச்செரி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் தடங்களில் சோதனை ஓட்டம் இன்று (பிப். 24) நடைபெற இருப்பதால் பொதுமக்கள் ரயில் பாதையைக் கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
![ஓமலூர் - மெச்செரி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் தடங்களில் சோதனை ஓட்டம் salem](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10752885-948-10752885-1614135103738.jpg)
ஓமலூர் - மெச்செரி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் தடங்களில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ரயில்வே பாதுகாப்பு, வேகமான சோதனையின் ஓட்டத்தை மேற்பார்வை செய்ய இருக்கிறார்.
ரயில்வே தெற்கு வட்டம், நாளை (பிப். 25) ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஓமலூர் - மெச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழித்தடத்தில் ஒரு சிறப்பு ரயில் அமைப்பைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள இருக்கிறார்
இந்த அதிவேக சோதனை ஓட்டமானது மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை மேற்கூறிய வழித்தடத்தில் நடத்தப்படும்.
மேலும் இந்த நேரங்களில் ஓமலூர் - மேச்சேரி சாலை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதைகளுக்கு அருகிலேயே வசிக்கும் மக்கள், ரயில் பாதைகளை அணுகவோ அல்லது கடக்கவோ கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.