கரோனா தொற்றின் இரண்டாவது அலை சேலம் மாவட்டத்தில் வேகமாக பரவி தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.
இந்தநிலையில் , பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த சேலம் தெற்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன், வீரபாண்டி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜமுத்து, சேலம் மேற்கு பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் ஆகியோர் அரசு மருத்துவமனை முதல்வர் முருகேசனிடம் கரோனா நோய் தொற்றைத் தடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்," சேலம் மாவட்டத்தில் கரோனோ தாக்கம் அதிகம் இல்லை என்று நேற்று ஆய்வு நடத்திய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.