குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பத்மாவின் செயல்பாட்டைக் கண்டித்து கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் குடும்பநல நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று (நவ.20) இரண்டாவது நாளாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நீதிமன்றப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கச் செயலர் முத்தமிழ்ச்செல்வன் கூறுகையில், "சேலம் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பத்மாவின் செயல்பாட்டைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.