தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆடிப்பாடி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள் - ஆடி பாடி நன்றி தெரிவித்த குறவர்கள்

நரிக்குறவ இன மக்களுக்கு உதவிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடனமாடி சேலத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சருக்கு ஆடி பாடி நன்றி தெரிவித்த குறவர்கள்
முதலமைச்சருக்கு ஆடி பாடி நன்றி தெரிவித்த குறவர்கள்

By

Published : Nov 9, 2021, 11:04 AM IST

சேலம்: பஞ்சதாங்கி ஏரி நரிக்குறவர் காலனியில் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். நரிக்குறவர் காலனி பகுதியில் அடிப்படை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருவதாகவும், தங்களுக்கு அரசின் சார்பில் வழங்கும் உதவிகள் கிடைக்காமல் உள்ளதாகவும் புகார் கூறி வந்தனர்.

இது தொடர்பாக பலமுறை அரசு அலுவலர்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் நேற்று (நவ.08) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட நரிக்குறவர்கள் திரண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மக்கள்

இது குறித்து அவர்கள் கூறுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நரிக்குறவர் இன குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்திற்குப் பல்வேறு நல உதவிகளை செய்துள்ளார். நரிக்குறவர் இன மக்களுக்கு பட்டா உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சருக்கு ஆடி பாடி நன்றி தெரிவித்த குறவர்கள்

இதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இதேபோல் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, உள்ளிட்ட உதவிகளை வழங்கி, அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

முன்னதாக முதலமைச்சரை வாழ்த்தி, நன்றி தெரிவிக்கும் விதமாக ஆடிப்பாடிய நரிக்குறவர்கள், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற நரிக்குறவர்கள்: காவல் துறையினருடன் வாக்குவாதம்

ABOUT THE AUTHOR

...view details