தமிழ்நாடு

tamil nadu

சேலம் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்!

By

Published : Jan 3, 2020, 6:58 PM IST

சேலம்: 131 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியை அதிமுகவும், திமுக 76 இடங்களையும் கைபற்றியுள்ளது.

salem district local body election results, சேலம் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்
salem district local body election results

சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் உள்ள 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 385 கிராம ஊராட்சி மன்றத் தலைவர், 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 4,299 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் 22 பேரும், திமுக 28, தேமுதிக 6, பாஜக 10, காங்கிரஸ் 1, பாமக 6, நாம் தமிழர் 24, இதர கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் 69 பேர் என மொத்தம் 166 பேர் களம் கண்டனர்.

மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் 212, திமுக 260, தேமுதிக 37, பாஜக 53, காங்கிரஸ் 12, கம்யூனிஸ்ட் 11, பாமக 61, மதிமுக 5, நாம் தமிழர் 66, இதர கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் 622 பேர் என மொத்தம் 1,339 பேர் போட்டியிட்டனர்.

தள்ளாத வயதிலும் ஊராட்சி மன்றத் தலைவராக வென்று காட்டிய வீரம்மாள்!

மேலும், 385 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 1,639 பேரும், 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 10,779 பேர் என மொத்தம் 13,923 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 403 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், 3,896 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றத் தேர்தலில் மொத்தம் 81.51 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தது.

வெற்றி வாகை சூடிய முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா!

இதனிடையே, சேலம் மாவட்டத்திலுள்ள 20 வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, இன்று மதியம் வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில்

  • அதிமுக - 18
  • திமுகவு - 5
  • பாமக - 4
  • தேமுதிக - 1

என முடிவுகள் வெளியாகியுள்ளன. ஏற்காடு ஊராட்சி வார்டு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.

73 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி!

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 288 பதவிகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்

  • அதிமுக - 131
  • திமுக - 76
  • பாமக - 39
  • தேமுதிக - 5
  • காங்கிரஸ் - 4
  • கம்யூனிஸ்ட் - 2
  • சுயேச்சை - 29
  • மதிமுக - 1
  • தமாகா - 1

என முடிவு வெளியாயுள்ளது.

சேலம் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

ABOUT THE AUTHOR

...view details