'7ஆவது பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தருக' - salem collector rohini
சேலம்: மாவட்டத்தில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பின்போது பொதுமக்கள், வணிகர்கள், தொழில் அமைப்பினர் முழு ஒத்துழைப்பு அளித்து உண்மையான தகவல்களை அளித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசின் புள்ளியியல்; திட்டச் செயலாக்கம் அமைச்சகத்தின் மூலம் பொருளாதார கணக்கெடுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஏழாவது பொருளாதார கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்க உள்ளது. இதில் பொதுச்சேவை மையங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கு கொடுப்பவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதையடுத்து சேலத்தில் நடைபெற உள்ள பொருளாதார கணக்கெடுப்பு பணியில் ஈடுபாடு உள்ள கணக்கெடுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தொடங்கிவைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பொருளாதார கணக்கெடுப்பின் அவசியம் குறித்துச் சிறப்புரையாற்றினார்.