சேலம்: சேலம் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் இன்று அதிகாலை சேலத்திலிருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஆத்தூர் முல்லைவாடி கிராமத்திலிருந்து வந்த ஆம்னி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த 5 நபர்கள் சம்பவ இடத்திலேயும், ஒரு நபர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.
மேலும், 5 நபர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.