தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலம் சிறை வார்டன்கள் திடீர் பணியிட மாற்றம்!

சேலம்: மத்திய சிறையில் பணிபுரிந்து வந்த சிறை வார்டன்கள் ஐந்து பேரை திடீர் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு சிறைத்துறை கூடுதல் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

salem centarl jail

By

Published : Nov 21, 2019, 8:05 PM IST

Updated : Nov 21, 2019, 8:29 PM IST

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே மத்திய சிறை உள்ளது. இங்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது சுமார் 500க்கும் மேற்பட்ட கைதிகள் சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.

இந்த சிறையில், கைதிகள் சிலர் செல்ஃபோன், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து, சேலம் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மாநகர் காவல் துறையினர் இணைந்து அவ்வபோது சிறைக்குள் திடீரென சென்று சோதனை செய்து வந்தனர்.

ஆனால் செல்ஃபோன், கஞ்சா போன்ற போதை பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. மாநகர காவல் துறையினர் சிறைக்கு சோதனை செய்ய வருவது முன்கூட்டியே சிறை கைதிகளுக்கு தெரியவந்து விடுவதாகவும், இதனால் செல்ஃபோன், போதைப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்றும் காவல்துறையினர் சிறை உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தனர்.

இதுகுறித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு சிறைத்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சேலம் மத்திய சிறைக்கு பணிக்கு வரும் வார்டன்கள், சிறை ஊழியர்கள் அனைவரும் முழு சோதனை செய்த பின்னரே சிறைக்குள் செல்ல தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மத்திய சிறை

இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் வார்டன்களாக பணியாற்றி வரும் கதிர்வேல் கோவை மத்திய சிறைக்கும், குணசேகரன் பொள்ளாச்சி சிறைக்கும், ரங்கநாதன், பாண்டியன் ஆகியோர் செய்யாறு கிளை சிறைக்கும், வெங்கடேசன் திருச்சி மத்திய சிறைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு சிறைத்துறை கூடுதல் இயக்குனர் ஆபாஷ்குமார் பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க:

சேலம் மத்திய சிறையில் பட்டுப்புழு வளர்ப்பு மையம் தொடக்கம்

Last Updated : Nov 21, 2019, 8:29 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details