சேலம் மாநகராட்சியின் 43ஆவது டிவிசனில் உள்ளது கிச்சிபாளையம். இங்குள்ள திருமலை நகர் பகுதியில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்துக்குள் நள்ளிரவில் புகுந்த ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்திருக்கிறார். இக்கொள்ளை சம்பவம் குறித்து கண்காணிப்பு புகைப்படக் கருவியின் காட்சிகள் மூலம் கரூர் வைஸ்யா வங்கியின் மும்பை அலுவலகத்திற்கு தெரிந்தது.
ஏடிஎம்-இல் கொள்ளை முயற்சி; இயந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் தப்பியது! - cctv footage
சேலம்: கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனே மும்பையில் இருந்து வங்கி அலுவலர்கள், சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு ,ஏடிஎம் மையத்தில் கொள்ளையர் புகுந்து கொள்ளை அடிப்பது குறித்து தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் வருவதற்குள், இயந்திரத்தை உடைக்கமுடியாததால் கொள்ளையர் தப்பி சென்றுவிட்டார். இக்கொள்ளையை அறிந்த சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரை மற்றும் சேலம் நகர உதவி ஆணையர் ஈஸ்வரன், காவல் ஆய்வாளர்கள் சரவணன், குமார் ஆகியோரும் ஏடிஎம் மையத்திற்கு சென்று விசாரித்தனர் .
பிறகு ஏடிஎம் மையத்திற்கு மோப்ப நாய் வரவழைத்து தடையங்கள் சேகரிக்கப்பட்டன. இதுதவிர கைரேகை நிபுணர்களும் அழைத்து வந்து கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஏடிஎம் மையத்தில் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் வைக்கப்பட்டிருக்கிறது. இதே ஏடிஎம் மையத்தில், கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு கொள்ளையர்கள் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.