தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (45). இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம் திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என்று 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நீராவி முருகன், திருநெல்வேலியின் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் வழியில் பதுங்கி இருப்பாதாக போலீசாருக்கு தகவல்கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து நீராவி முருகனை சுற்றிவளைத்தனர். அப்போது காவலர்கள், முருகனிடம் சரணடையும்படி அறிவுறுத்தினர். ஆனால் முருகன் காவர்களை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது இசக்கி ராஜா முருகனை என்கவுண்டர் செய்தார்.
2019ஆம் ஆண்டு நீராவி முருகனை வள்ளியூர் அருகே காவலர்கள் சுற்றிவளைத்தபோதும், அவர் தாக்குதலில் ஈடுபட்டார். இருப்பினும், காவலர்கள் மேல் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர். இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த நீராவி முருகன் தலைமறைவாக இருந்துவந்த நிலையில், இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அண்மையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 40 பவுன் நகைகளை நீராவி முருகன் கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த இசக்கி ராஜா?
நீராவி முருகனை என்கவுண்டர் செய்த உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வளராக பணிபுரிந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்து, தனி கவனம் பெற்றார். இதனிடையே ரவுடி நீராவி முருகனை பிடிக்கும் தனிப்படைக்கு தலைமை தாங்கினார். இந்த நிலையில், முருகனை என்கவுண்டர் செய்தார்.
இதையும் படிங்க:அமெரிக்க ஊடகவியலாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை!