தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 20ஆம் தேதிமுதல் 27ஆம் தேதிவரை சாலைப் பாதுகாப்பு வாரவிழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதனிடையே கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழா, விழிப்புணர்வுப் பேரணி கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த விழிப்புணர்வுப் பேரணியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும், விபத்தின்போது உயிரிழப்பைத் தடுக்க அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும், வாகனத்தை இயக்கும்போது கைப்பேசியை பயன்படுத்தக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், விழிப்புணர்வுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.