திருநெல்வேலி மாவட்டம் முன்னீர் பள்ளம் அடுத்த அடைமிதிப்பான் குளத்தில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் (மே14) நள்ளிரவு 11.30 மணியளவில் பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதில் முருகன், விஜய் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேர் கடும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் செல்வம் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
வருவாய்த்துறை செயலாளர் மற்றும் கனிமவளத் துறை இயக்குனர் நேரில் ஆய்வு தொடர்ந்து மீதமுள்ள ராஜேந்திரன் செல்வகுமார் மற்றொரு முருகன் ஆகிய 3 பேரின் கதி என்னவென்று தெரியாமல் உள்ளது. எனவே அவர்களை மீட்பதற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு நேற்றிரவு (மே 15) விரைந்தனர்.
தற்போது அக்குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதற்கிடையில் சென்னையிலிருந்து வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் கனிமவளம் சுங்க துறை இயக்குனர் நிர்மல் ராஜ் ஆகிய அலுவலர்கள் தற்போது விபத்து நடைபெற்ற கல்குவாரியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விபத்து குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் அங்கிருந்த மீட்புப் படையினரிடம் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:கல்குவாரியில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம் - நெல்லை மாவட்ட ஆட்சியர்