தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு!

காவிரி நீர்பிடிப்புப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை 16 கண் மதகு வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணை 16 கண் மதகு வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு

By

Published : Jul 31, 2022, 4:53 PM IST

சேலம்:மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை 42ஆவது முறையாக கடந்த ஜூலை 16ஆம் தேதி எட்டியது. இதனையடுத்து 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் அதிகபட்சமாக விநாடிக்கு 1,33,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டு மதகு அடைக்கப்பட்டது.

இதற்கிடையே தற்போது மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 23ஆயிரம் கன அடியிலிருந்து 25,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று(ஜூலை.31) காலை 9:30 மணி அளவில் மீண்டும் திறக்கப்பட்டு 16 கண் மதகுகள் வழியாக 2,500 கன அடி தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர் நண்பகல் 12 மணி முதல் விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 23ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டு வருவதையடுத்து காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து தண்டோரா மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

ABOUT THE AUTHOR

...view details