சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு செல்லும் மலைப்பாதைகளில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளது. இது தவிர ஏற்காட்டில் பெய்யும் மழைநீர், ஏற்காடு மலையடிவாரத்திலுள்ள கற்பகம் கிராமம் அருகிலுள்ள ஓடைகளில் வந்து மூன்று தடுப்பணைகள் நிரம்பிய பின்னர் கன்னங்குறிச்சி அருகிலுள்ள பொது ஏரிக்கு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்ததால் புதுயேரிக்கு வெள்ளம்போல் மழைநீர் வரத்தொடங்கியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக புதுயேரி தண்ணீர் இல்லாமல் வறண்டு காய்ந்துக் கிடந்தது. தற்போது பெய்துவரும் மழையால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் பெரியவர்களும், சிறுவர், சிறுமிகளும் குளிக்கிறார்கள்.