சேலம் அரசு மருத்துவனையில் செயல்பட்டு வரும் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் நூற்றுக்கணக்கான கரோனா நோயாளிகள் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லையென்றும்; ஊழியர்கள் நோயாளிகளை அலைக்கழிப்பதாகவும் கூறி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய பெண் ஒருவர் தன் கணவனை அட்மிட் செய்யவே 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்கள் எனவும்; பணத்தை வாங்கிய பிறகுதான் படுக்கை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்றும் பரபரப்பு குற்றஞ்சாட்டினார். அவர் தன் மனக்குமுறலைத் தெரிவித்த பின்னர், அடுத்தடுத்து தங்களுக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர்.
அவரைத் தொடர்ந்து பேசிய நோயாளியின் உறவினர் ஒருவர், மருத்துவர்கள், செவிலியர் நோயாளிகளை சரியாக கண்காணிப்பதில்லை. நோயாளிகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள். அதை அப்புறப்படுத்த கூட ஆட்கள் இல்லை என வேதனையுடன் தெரிவித்தார்.