ஜாமீன் கிடைக்காததால், கைதி தூக்கிட்டு தற்கொலை! - ஜாமீன் கிடைக்காததால் தற்கொலை
சேலம்: மத்திய சிறையில் விசாரணை கைதி அசோக்குமார் என்பவர் ஜாமீன் கிடைக்காததால், தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். சேலத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்த அசோக்குமார் 17 வயது பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அசோக்குமார் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தின் மனு செய்ததாகவும், ஆனால் ஜாமீன் கிடைக்காத நிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அசோக்குமாரின் சடலத்தை மீட்ட சிறைத்துறை காவலர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மத்திய சிறையில் கைது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்தும் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.