சேலம்:அம்மாபேட்டை மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (39). இவர், வாழையிலை கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ஷாலினி (22). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
ஷாலினி கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காததால் மனைவிடம் இருந்த செல்போனை கணவர் பறித்துக் கொண்டுள்ளார்.
இருப்பினும் கணவருக்குத் தெரியாமல் அடிக்கடி செல்போனில் ரகசியமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 02) நள்ளிரவு ஒரு மணியளவில் ஷாலினி கூச்சலிட்டவாரு வீட்டின் வெளியே வந்துள்ளார்.
சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்த கணவர்
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டினுள் நுழைந்து தனது நகையை பறித்துச் சென்றுவிட்டனர், அவர்களைத் தடுத்த தனது கணவரை கொலை செய்துவிட்டனர் எனக் கூறியுள்ளார்.