தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறையில் கஞ்சா புழக்கம்? - போலீஸ் அதிரடி சோதனை - salem central Jail

சேலம் மத்திய சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பயன்படுத்துவதாக வந்த புகாரையடுத்து அங்கு காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சிறையில் கஞ்சா புழக்கம்
சிறையில் கஞ்சா புழக்கம்

By

Published : Aug 6, 2021, 8:03 PM IST

சேலம்: மத்திய சிறையிலுள்ள கைதிகள் சிலர் செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்தி வருவதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடாவிற்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் இன்று (ஆக.6) அதிகாலை 5 மணியளவில் சேலம் அஸ்தம்பட்டி உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையிலான 30 காவல் துறையினர், 30 மாநகர ஆயுதப்படை காவலர்கள், 30 மத்திய சிறை காவலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

சுமார் 2 மணி நேரமாக நடந்த சோதனையில் ஒரு செல்போன், ஒரு சிறிய கஞ்சா பொட்டலங்கள் கூட சிக்கவில்லை. தகவல் கிடைத்ததுபோல உன்மையிலே சிறையில் கஞ்சா பயன்படுத்தி அதனை பதுக்கி வைத்துள்ளனரா அல்லது பொய்யான தகவல் கிடைத்ததா என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 14 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details