கரோனோ ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இந்தநிலையில் ஊரடங்கு அறிவிப்பில் இருந்து தளர்வு வழங்கப்பட்ட நிலையில், 27 மாவட்டங்களில் மீண்டும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பாமக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடை திறப்பை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று (ஜூன் 17) சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் பாமக சார்பில் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கறுப்புக்கொடி ஏந்தி, பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. அருள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர் .
டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுக: பாமக - சேலம் மாவட்ட செய்திகள்
சேலம்: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் சேலத்தில் நடைபெற்றது.
டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட பாமக போராட்டம்